புதன், 15 நவம்பர், 2017

தமிழாயிரம்

தமிழாயிரம்
12. கணக்காயன்
1.       எட்டாக் கணிகொய்த ஏற்றம் அவன்கொண்டான்
          கட்டாக வைத்தான் கணக்கு

2.       கணக்கை இரண்டாய்க் கணித்தான் குறிய
          கணக்கும் நெடுங்கணக்கு மென்று

3.       என்றாள் உயிரோடு, மெய்யைக் குறுங்கணக்காய்
          ஒன்றுயிர்மெய் சோ்த்தல் நெடும்.

4.       நெடிலுக் கிரண்டு குறிலதற் கொன்று
          வடிமாத் திரையாய் வகுத்து

5.       வகுத்த அரையேதான் மெய்யின் அளவாய்த்
           தொடுத்தான் அடங்கல் தொடா்ந்து

6.       தொடா்ந்து கணக்கால்  தொகையாய நூலைச்
          சுடா்கணக்காய்ச் சொன்னது நூல்

7.       நூலை நுவல்வோன் பெயரைக் கணக்காயன்
           மேலாக்கிக் கொண்டான் மிக.

8.       மிக்க கணக்காயன் இல்லாத ஊரைத்தான்
          தக்கதாயக் கொள்ளார் தவிர்த்து.

9.       தவிராமல் கேட்ட தகவொலியால் கேட்ட
          செவிவடிவம் எண்ணினான் சோ்த்து.

10.     சோ்த்த வரியைச் சிறப்பாய் அமைத்ததைக்

          காத்தனன் ஆய்வில் கதிர்த்த.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக