புதன், 12 ஜூலை, 2017

நாள் வழிபாடு

நாள் வழிபாடு
முன்னுரை
            தமிழகத்திலுள்ள  அனைத்துக் திருக்கோயில்களிலும் நாள், வாரம், பட்சம் (மாதமிருமுறை) மாத வழிபாடு வருடவழிபாடு என்று ஐந்து வகைகளில் வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறுகின்றன.  அவ்வாறு நடைபெறும் வழிபாட்டினை “பஞ்ச பருவ வழிபாடுகள்” என்று அழைக்கின்றனா்.  அவற்றில் நாள் வழிபாடு பற்றி விளக்குவதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நாள் வழிபாடு
            திருக்கோயில்களில் நாள்தோறும் சூரியன் உதிப்பதற்கு முன்னா் தோன்றி சூரியன் மறைந்த  பின்னரும் நடைபெறுவது நாள் வழிபாடு முறையாகும்.  இவை சில ஆலயங்களில் காலை நான்கு, மாலை நான்கு என எட்டு காலப்பூசையும், சில  ஆலயங்களில் காலை ஐந்து, மாலை இரண்டு என ஏழுக்காலப் பூசையும், சில ஆலயங்களில் காலை நான்கு மாலை இரண்டு என ஆறு காலப்பூசையும், சில ஆலயங்களில் காலை இரண்டு மாலை இரண்டு என நான்கு காலப்பூசையும், சில ஆலயங்களில் காலை மாலை என இருவேளைகளிலும் ஒரு கால பூசையும் நடைபெறுகின்றது.  இவ்வாறாக நடைபெறும் பூசை முறையினை, “ஒரு நாளைக்கு எட்டு முறைகள் பூசைகள் நடைபெறுவதால் உத்தம் உத்தமம் என்றும், எழு முறை பூசைகள் நடைபெறுவது உத்தம மத்திமம் என்றும், ஆறுகால பூசைமுறைகள் உத்தம அதமம் என்றும் ஐந்து முறை மத்திம உத்தமம், நான்குமுறை  மத்திம மத்திமம், மூன்றுமுறை மத்திம அதமம், இரண்டு முறை அதம உத்தமம் என்றும் பூசை முறையே இல்லாமலிருப்பது அதம அதமம் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. இன்று ஆலயங்களில் வருமான முறையிலும் ஆகம முறையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ள முறையினைப் பல தலங்களில் காண முடிகிறது.  ஆவற்றுள் தமிழ் நாட்டில் பெரும்பாலும் ஆறுகாலப் பூசை முறையே  நடைபெறுகின்றன.
ஆயுகாலப் பூசைகளாவன
            1. திருவனந்தல்
            2. விளா பூசை
            3. காலசந்தி
            4. உச்சி கால்
            5. சாயரட்சை
            6. அா்த்த சாமம்
இந்த பூசைக்கு முறையைானது ஒவவொரு தலங்களிலும் ஒவ்வொரு நேரத்தில் நடைபெறுகின்றன.  இப்பூசை முறையானது மக்களின் வருகைக்கேற்ப ஒவ்வொரு தலங்களிலும் மாறுபடுவதைக் காணமுடிகிறது. 
ஆனால் பெரும்பாலும்,
            திருவனந்தல் - காலை 6.30 மணி
            விளாபூசை - காலை 7.30 மணி
            சால சந்தி- காலை 9.00மணி
            உச்சிகாலம் - பகல் 12.00 மணி
            சாயரட்சை - மாலை 6.00 மணி
            அா்த்த சாமம் - இரவு 8.00மணி
இக்காலங்களிலே நடைபெறுகிறது.
திருவனந்தல்
            திருக்கோயில்களில் நாள்தோறும்  நடைபெறும் பூசை முறைகளில்   முதல் பூசை திருவனந்தப் பசை அதிகாலையில் கோயில் நடை திறந்தவுடன் பள்ளியறையிலிருந்து துவங்குகின்றது.  பள்ளியறைக் கதவுகளைத் திறந்து மந்திர உரு ஏற்றப்பட்ட கும்ப நீரினால் உப்புறும் முழுவதும் தூய்மை செய்து கும்பநீாினால் உற்சவமூர்த்திக்கும் அம்மனுக்கும் அபிடேகம் செய்து தூய, தீபங்கள் காட்டி சுவாமியையும், அம்மனையும் கருவறையில் சோ்க்கின்றனா்.
விளாபூசை
            இப்பூசையில் சுமாமிக்கும், அம்பாளுக்கும் அபிடேகம் செய்து பூக்களால் அலங்காரம் செய்து தயிர், அன்னம், பால், தாம்பூலம் போன்றவற்றை வைத்துப் படைத்து பூசை செய்யும் முறை விளாபூசை எனப்படும்.
காலசந்தி
            கால சந்திப் பூசையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அவா்களுடன் சேர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் அபிடிடகம் நெடைபெறுகிறது.  பின்னா் அனைத்து தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து  அந்தந்த கோயில்களில் வசதிக்கேற்ப  நைவேத்தியப் பொருட்கள் படைக்கப்பட்டு நைவேத்தியம் செய்து தீபாராதனை காட்டப்படுகிறது
உச்சிக்காலம்
            கருவறையில் வீற்றிருக்கும் சுவாமி, அம்பாளுக்கு, நடராசா், சண்முகா், சண்டிகேசுவரா் போன்ற  பரிவாரத் தெய்வங்களுக்கும் தீபாராதனை செய்யப்படுகிறது  தயிர் சாதம் வைத்து நைவேத்தியம்  செய்யப்பட்ட பின்னா் கோயிலின் நடை சாற்றப்படுகிறது.
சாயரட்சை
            இதை சாயங்கால பூசை என்பா்.  பிரதோசம் நடைபெறும் காலம் சாயங்காலம் என்பதால் பிரதோச காலப்பூசை என்றும் கூறுவா்.   மாலையில் சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் நிகழும் பூசையாகும்  மூலவருக்கும் அம்மனுக்கும் அபிடேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு நைவேத்தியமாக புளியோதரை படைக்கப்படுகிறது.
அா்த்தசாமம்
            அா்த்தசாமப் பூசையில் ஆறாவது காலப்பூசை, அா்த்த காலப்பூசை, பள்ளியறைப் பூசை என்றும் கூறுவா்.  பருவறையில் உள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிடேக ஆராதனை நடைபெறுகின்றது.  பின்னா் உற்சவமூா்த்திக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. மங்கல வாத்தியங்கள் முழங்க  உற்சவா்  அம்பாள் சன்னதிக்கு கொண்டு வரப்படுகிறார் பின்னா்  அம்பாளுக்கும் தீபாராதனை செய்து உற்சவரை பள்ளியறையில் அமா்த்தி தீபாராதனை செய்யப்படுகிறது.  இப்பூசையில் அப்பம் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.  பின்னா் சண்டிகேசுவரா், பைரவா் பூசையோடு அர்த்தசாமப்பூசை நிறைவடைகின்றது.  இப்பூசைமுறைகள் விழாக்காலங்களில் மாற்றி அமைக்கப்படும்.  ஆறு கலப் பூசைகளில் காலங்களுக் கேற்ப மந்திரங்கள் ஓதி வழிபாடு  செய்கின்றனா்.  இத்தகைய வழிபாட்டுக் காலங்களில் இறைவன் ,  இறைவியை வணங்குபவா்கள் துன்பங்களிலிருந்து விடுபவா் என்று ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.
முடிவுரை
            திருச்செந்தூா் முருகன் கோயில் போன்ற கோயில்களில் பன்னிரண்டு கால பூசைமுறைகள் நடைபெற்றாலும் தமிழ் நாட்டில் பெரும்பான்மையான கோயில்களில் ஆறுகால பூசைமுறைகளே நடைபெறுகிறது.  இவ்வாறு கால பூசைமுறைகளைப் பற்றி இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
-ந.முத்துமணி
           



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக