புதன், 12 ஜூலை, 2017

ஆடிப் பட்டம்

தலையங்கம்
தேன் - 1                                                                                              துளி-7   
              தி .பி 2048 (கி.பி 2017)  ஆடித்திங்கள்(சூலை மாதம்)                                                                                                      
விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
என்று விருந்தோம்பலைத் தலையாய பண்புகளில் ஒன்றாக கொண்டுள்ள உயா்தமிழ்ச் சொந்தங்களுக்கு உயா் வணக்கம்
            தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு அம்சம் உள்ளன.  அதில் அதிக அளவிலான சிறப்புகளும் பெருமைகளும் கொண்டது ஆடி மாதம்.  அம்மாதத்தில் அம்மனை வணங்கினால் அதிக நன்மைகளைப் பெறலாம் சத்தி வடிவான பராசக்தி, மலையரசன் மகளாய் அவதரித்த மதுரை மீனாட்சியாய் அவதரித்ததும் ஆடி மாதம் தான்.  
            அதுபோல் பிராணவாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் ஆடி மாதம் தான் சீவாதார சக்தி நிறைந்த ஆடி மாதத்தில் தான் விவசாயப் பணிகள் தொடங்கி விதைப்புப் பணி நடைபெறும் அதனாலேயே முன்னோர் “ஆடிப் பட்டம் தேடி விதை” என்று கூறினா் மேலும் ஆடியில் ஆலம் தோறும் திருவிழாக் கோலம் காண்பது போல் வியாபாரத் தலங்களிலும் ஆடிக் கொண்டாட்டம் அமா்க்களப்படும்
            அன்பின் வாழ்த்துகளுடன்..
தேமதுரம்-ஆசிரியர் குழ


ஆசிரியர்
.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர்
இரா.கார்த்திக்

துணையாசிரியர்
 கா.சுபா 

ஆசிரியர் குழு 
பெ.குபேந்திரன்
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
மீனாட்சி

கணினிதட்டச்சு
.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.
தொலைபேசி:04565-223255































தமிழ் இலக்கணங்களில் பால்பகுப்பு முறைகள்

தமிழ் இலக்கணங்களில் பால்பகுப்பு முறைகள்

தொல்காப்பியம் தொடங்கி தமழ் இலக்கண நூல்களில் காணப்படும் பால் பகுப்பு முறையை ஆய்வதாக  இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியத்தில் பால்பகுப்பு முறை
            ஆண்பால், பெண்பால் பயா்பால் ஆகிய மூன்றுக் உயா்திணைக்குரிய பால்கள் என்பதை,
            ஆடுஉ அறிசொல் மகடூ அறிசொல்
            பல்லோ ஏறியுஞ் சொல்லொடு சிவணி
            அம்முப் பாற்சொல் உயா்திணை யவ்வே (தொல். சொல்.2)
என்னும் நூற்பாவில் தொல்காப்பியா் விளக்குகிறார்.
            அதேபோல் ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டும் அஃறிணைக்குரிய பால்கள் என்பதை,
            ஒன்றறி சொல்லே பலவறி  சொல்லென்
            றாயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே (தொல்.சொல்.3)
என்னும் நூற்பா உணா்த்துகிறது.
            மேலும், இயற்கையின் அமைப்பிலிருந்து மாறுபட்டு ஆண் தன்மை குறைத்து பெண் தன்மை மிகுந்தோ, பெண்  தன்மை குறைந்து ஆண் தன்மை மிகுந்தோ விளங்குபவா்களை அம்மிகுந்த தன்மையால் ஆண் பாலாகவோ,  பெண்பாலாகவோ அமைத்தல் வேண்டும் எனத் தொல்காப்பியம் நவில்கிறது. (தொல்.சொல்.4)
ஒத்த மரபு
            தொல்காப்பியரின் ஐம்பாற் மரபை அவிநயம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், இனிய  தமிழ் இலக்கணம், இலகு தமிழ் ஐந்திலக்கணம், தமிழ்க் காப்பு இயம் போன்றவை உடன்படுகின்றன.
            மேலும், தொல்காப்பியத்தை அடியொற்றி அவிநயம், இலக்கண விளக்கம் போன்றவை பேடு, தெய்வம் முதலியவை உயா்திணையிடத்து அதற்குரிய  பாலாய் வேறுபட்டு இசைக்கும்  என்னும் கருத்தை ஏற்றும் கொள்கின்றன.
மரபு மாற்றம்
*     நன்னூல் தொல்காப்பியரின் ஐம்பாற் பகுப்பை ஏற்றுக் கொள்கிறது.  எனினும் மூன்றாம் பாலினத்தைச் சுட்டுமிடத்து சற்றே மாறுபடுகிறது நன்னூல்.  பெண் தன்மையை விட்டு ஆண் தன்மையே அவாவுவனவாகிய பேடுகள் உயர்திணை ஆண் பாலாகும்.  ஆண் தன்மையை விட்டுப் பெண் தன்மையை அவாவுவனவாகிய பேடுகள் உயா்திணைப் பெண் பாலாகும் என்று விளக்கும் நன்னூல்  இவை இரண்டும் உயா்திணை ஆவதன்றி அஃறிணையை ஒத்தும் நடக்கும் (நன்.264) என்கிறது.  ஆனால் தொல்காப்பியம் உயா் திணையில் வரும் என்று மட்டுமே கூறுகிறது.  அஃறிணையில் வரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடவில்லை.  பேடுகளாகப் படைக்கப்பட்டவா்களும் மனிதா்களே என்று அவா்களையும் உயா்திணையில் வைத்துப் பார்த்த தொல்காப்பியரின் மனப்பாங்கு பாராட்டத்தக்கது.
*     சுவாமிநாதம் தொல்காப்பிய பால்குப்பை ஏற்றுக் கொள்கிறது எனினும் உயா்திணையை உயா்பால் என்றும், அஃறிணையை இழிபால் என்ற சொல்லாலும் குறிக்கிறது.  மேலும் நன்னூலைப் பின்பற்றி தெய்வம், பேடு என்பனவற்றையும் ஐம்பாலுள் அடக்கி வினைமுற்று விகுதியால் விளக்குவா் என நவில்கிறது.  (சு.நா.35)
*     அறுவகை இலக்கணம் முந்தைய  இலக்கணிகளின் கருத்திலிருந்து வேறுபட்டு ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டனை மட்டுமே உயா்திணைப் பாலாகக் குறிப்பிடுகிறது.  பலா்பாலைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, பலா்பாலானது  ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டிலும் அடங்கிவிடும் ஆதலின் அதனைத் தனித்துக் கூறவில்லை போலும்.  மேலும், அஃறிணைப் பாலை ‘அலிப்பால்’  என்ற சொல்லாட்சியால் அறுவகை  இலக்கணம் சுட்டுகிறது (அறு.185)
மரபு அழிதல்
*     வீரசோழியம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து, தென்னூல் விளக்கக்  போன்ற நூல்களில் பால் புகுப்பு கூறப்படவில்லை.
*     அறுவகை இலக்கணத்தில் பலா்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய பால்பகுப்பு முறைகள் பேசப்படவில்லை.
*     நேமிநாதம், வீரசோழியம், பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து, தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், இலகு தமிழ் ஐந்திலக்கணம், இனிய தமிழ் இலக்கணம், தமிழ்க் காப்பு இயம் போன்றவற்றில் ‘பேடு’ பெறும் பால்முடிபு குறித்து யாதும் கூறப்படவில்லை.
*     அறுவகை இலக்கணம் அஃறிணையை ‘அலிப்பால்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.  மற்றபடி மூன்றாம் பாலினம் குறித்த செய்திகள் அறுவகை இலக்கணத்தில் காணப்படவில்லை இவ்விடத்தில் ‘அலிப்பால்’  என்பது மூன்றாம் பாலினத்தைக் குறிக்காமல் அஃறிணையைக் குறிக்க வரும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொகுப்புரை
·        தொல்காப்பியம் குறிப்பிடும் ஐம்பாற்பகுப்பை பெரும்பான்மையான இலக்கண நூல்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
·        பேடுகளுக்கான பால் முடிபை தொல்காப்பியல் உயர்திணையில்  கூற, நன்னூல் அஃறிணையை ஒத்தும் நடக்கும் என்கிறது
·        உயா்திணை, அஃறிணையைக் குறிக்க உயா்பால், இழிபால் எனற சொல்லாட்சியை சுவாமிநாதம் பயன்படுத்தியுள்ளது.
·        அஃறிணைப்பாலை ‘அலிப்பால்’ என்ற சொல்லாட்சியால் அறுவகை  இலக்கணம் சுட்டுகிறது.


 கா.சுபா














கேழ்வரகு இனிப்பு அடை

கேழ்வரகு இனிப்பு அடை
தேவையான பொருட்கள்
          1.கேழ்வரகு மாவு - 1கப் (ராகி மாவு)
            2. வெல்லம் - ½  கப்
            3. துறுவிய தேய்காய் - ¼ கப்
            4. ஏலக்காய் பொடி
            5.  நல்லெண்ணெய் - தேவையான அளவு
செயல்முறை
          1. வெல்லத்தை உதிர்த்து ஒரு பாத்திரத்தில்  போட்டு அதில் ஒரு கரண்டி அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
            2. வெல்லம் முழுவதும்  கரைந்ததும் வடிகட்டி, அதில் துறுவிய தேய்காய், ஏலக்காய் பொடி, கேழ்வரகு மாவு சேர்த்து கட்டிப் படாமல் கிளறிவிடவும்.
            3. உதிரியாக இல்லாமல் சப்பாத்தி மாவுபோல் பிசையவும்.
            4. சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வாழையிலையில் எண்ணெய் தடவி லெ்லி வடை போன்று தட்டி, தோசைக்கல்லில்  சிறுந்தீ சூட்டில் இருபுறமும் நல்லெண்ணெய் விட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்.
            5. சூடான, சுவையான அடையினை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
-தே.தீபா


கோடையும் கோடையும்


கோடையும் கோடையும்
நிலம் முழுவதும் கடை
எங்கே போனது காடை
வானிற்கு வழங்கவில்லை பசுங்கொடை
மனிதன் போய்விட்டான் சோடை
வானம் தருகிறது தணியா கோடை
-மு.சிவசுப்பிரமணியன்


நாள் வழிபாடு

நாள் வழிபாடு
முன்னுரை
            தமிழகத்திலுள்ள  அனைத்துக் திருக்கோயில்களிலும் நாள், வாரம், பட்சம் (மாதமிருமுறை) மாத வழிபாடு வருடவழிபாடு என்று ஐந்து வகைகளில் வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறுகின்றன.  அவ்வாறு நடைபெறும் வழிபாட்டினை “பஞ்ச பருவ வழிபாடுகள்” என்று அழைக்கின்றனா்.  அவற்றில் நாள் வழிபாடு பற்றி விளக்குவதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நாள் வழிபாடு
            திருக்கோயில்களில் நாள்தோறும் சூரியன் உதிப்பதற்கு முன்னா் தோன்றி சூரியன் மறைந்த  பின்னரும் நடைபெறுவது நாள் வழிபாடு முறையாகும்.  இவை சில ஆலயங்களில் காலை நான்கு, மாலை நான்கு என எட்டு காலப்பூசையும், சில  ஆலயங்களில் காலை ஐந்து, மாலை இரண்டு என ஏழுக்காலப் பூசையும், சில ஆலயங்களில் காலை நான்கு மாலை இரண்டு என ஆறு காலப்பூசையும், சில ஆலயங்களில் காலை இரண்டு மாலை இரண்டு என நான்கு காலப்பூசையும், சில ஆலயங்களில் காலை மாலை என இருவேளைகளிலும் ஒரு கால பூசையும் நடைபெறுகின்றது.  இவ்வாறாக நடைபெறும் பூசை முறையினை, “ஒரு நாளைக்கு எட்டு முறைகள் பூசைகள் நடைபெறுவதால் உத்தம் உத்தமம் என்றும், எழு முறை பூசைகள் நடைபெறுவது உத்தம மத்திமம் என்றும், ஆறுகால பூசைமுறைகள் உத்தம அதமம் என்றும் ஐந்து முறை மத்திம உத்தமம், நான்குமுறை  மத்திம மத்திமம், மூன்றுமுறை மத்திம அதமம், இரண்டு முறை அதம உத்தமம் என்றும் பூசை முறையே இல்லாமலிருப்பது அதம அதமம் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. இன்று ஆலயங்களில் வருமான முறையிலும் ஆகம முறையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ள முறையினைப் பல தலங்களில் காண முடிகிறது.  ஆவற்றுள் தமிழ் நாட்டில் பெரும்பாலும் ஆறுகாலப் பூசை முறையே  நடைபெறுகின்றன.
ஆயுகாலப் பூசைகளாவன
            1. திருவனந்தல்
            2. விளா பூசை
            3. காலசந்தி
            4. உச்சி கால்
            5. சாயரட்சை
            6. அா்த்த சாமம்
இந்த பூசைக்கு முறையைானது ஒவவொரு தலங்களிலும் ஒவ்வொரு நேரத்தில் நடைபெறுகின்றன.  இப்பூசை முறையானது மக்களின் வருகைக்கேற்ப ஒவ்வொரு தலங்களிலும் மாறுபடுவதைக் காணமுடிகிறது. 
ஆனால் பெரும்பாலும்,
            திருவனந்தல் - காலை 6.30 மணி
            விளாபூசை - காலை 7.30 மணி
            சால சந்தி- காலை 9.00மணி
            உச்சிகாலம் - பகல் 12.00 மணி
            சாயரட்சை - மாலை 6.00 மணி
            அா்த்த சாமம் - இரவு 8.00மணி
இக்காலங்களிலே நடைபெறுகிறது.
திருவனந்தல்
            திருக்கோயில்களில் நாள்தோறும்  நடைபெறும் பூசை முறைகளில்   முதல் பூசை திருவனந்தப் பசை அதிகாலையில் கோயில் நடை திறந்தவுடன் பள்ளியறையிலிருந்து துவங்குகின்றது.  பள்ளியறைக் கதவுகளைத் திறந்து மந்திர உரு ஏற்றப்பட்ட கும்ப நீரினால் உப்புறும் முழுவதும் தூய்மை செய்து கும்பநீாினால் உற்சவமூர்த்திக்கும் அம்மனுக்கும் அபிடேகம் செய்து தூய, தீபங்கள் காட்டி சுவாமியையும், அம்மனையும் கருவறையில் சோ்க்கின்றனா்.
விளாபூசை
            இப்பூசையில் சுமாமிக்கும், அம்பாளுக்கும் அபிடேகம் செய்து பூக்களால் அலங்காரம் செய்து தயிர், அன்னம், பால், தாம்பூலம் போன்றவற்றை வைத்துப் படைத்து பூசை செய்யும் முறை விளாபூசை எனப்படும்.
காலசந்தி
            கால சந்திப் பூசையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அவா்களுடன் சேர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் அபிடிடகம் நெடைபெறுகிறது.  பின்னா் அனைத்து தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து  அந்தந்த கோயில்களில் வசதிக்கேற்ப  நைவேத்தியப் பொருட்கள் படைக்கப்பட்டு நைவேத்தியம் செய்து தீபாராதனை காட்டப்படுகிறது
உச்சிக்காலம்
            கருவறையில் வீற்றிருக்கும் சுவாமி, அம்பாளுக்கு, நடராசா், சண்முகா், சண்டிகேசுவரா் போன்ற  பரிவாரத் தெய்வங்களுக்கும் தீபாராதனை செய்யப்படுகிறது  தயிர் சாதம் வைத்து நைவேத்தியம்  செய்யப்பட்ட பின்னா் கோயிலின் நடை சாற்றப்படுகிறது.
சாயரட்சை
            இதை சாயங்கால பூசை என்பா்.  பிரதோசம் நடைபெறும் காலம் சாயங்காலம் என்பதால் பிரதோச காலப்பூசை என்றும் கூறுவா்.   மாலையில் சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் நிகழும் பூசையாகும்  மூலவருக்கும் அம்மனுக்கும் அபிடேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு நைவேத்தியமாக புளியோதரை படைக்கப்படுகிறது.
அா்த்தசாமம்
            அா்த்தசாமப் பூசையில் ஆறாவது காலப்பூசை, அா்த்த காலப்பூசை, பள்ளியறைப் பூசை என்றும் கூறுவா்.  பருவறையில் உள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிடேக ஆராதனை நடைபெறுகின்றது.  பின்னா் உற்சவமூா்த்திக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. மங்கல வாத்தியங்கள் முழங்க  உற்சவா்  அம்பாள் சன்னதிக்கு கொண்டு வரப்படுகிறார் பின்னா்  அம்பாளுக்கும் தீபாராதனை செய்து உற்சவரை பள்ளியறையில் அமா்த்தி தீபாராதனை செய்யப்படுகிறது.  இப்பூசையில் அப்பம் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.  பின்னா் சண்டிகேசுவரா், பைரவா் பூசையோடு அர்த்தசாமப்பூசை நிறைவடைகின்றது.  இப்பூசைமுறைகள் விழாக்காலங்களில் மாற்றி அமைக்கப்படும்.  ஆறு கலப் பூசைகளில் காலங்களுக் கேற்ப மந்திரங்கள் ஓதி வழிபாடு  செய்கின்றனா்.  இத்தகைய வழிபாட்டுக் காலங்களில் இறைவன் ,  இறைவியை வணங்குபவா்கள் துன்பங்களிலிருந்து விடுபவா் என்று ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.
முடிவுரை
            திருச்செந்தூா் முருகன் கோயில் போன்ற கோயில்களில் பன்னிரண்டு கால பூசைமுறைகள் நடைபெற்றாலும் தமிழ் நாட்டில் பெரும்பான்மையான கோயில்களில் ஆறுகால பூசைமுறைகளே நடைபெறுகிறது.  இவ்வாறு கால பூசைமுறைகளைப் பற்றி இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
-ந.முத்துமணி
           



பழமொழியின் உண்மைப் பொருள்

பழமொழியின்  உண்மைப் பொருள்
“கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால்  கல்லைக் காணோம்” என்பது பழமொழி.  இது நாயை விரட்ட கல்லைத் தேடுவதும் கல் கிட்டும் போது நாய் ஓடிவிடுவதையும் குறிப்பதல்ல கல்லிலே கலைவண்ணம் கண்டவீா்கள் தமிழா்கள் கைதேர்ந்த சிற்பியின் கை வண்ணத்துக்கு வழங்கப் பட்ட சான்றிதழே அப்பழமொழி.  கல்லிலே அழகுற வடிக்கப் பட்ட நாயின் சிலையைக் கலைக்கண்ணோடு நோக்கினால் அங்கே கல் தெரியாது.  கல்லை மட்டும் காண்போருக்கு நாய் வடிவம் தென்படாது.
            ஒரு சிற்பின் கை வண்ணத்திற்குத் கிடைத்த பாராட்டு இன் று   நன்றியுள்ள நாயை விரட்டுவதற்கு உரியதாக பொருள் மருவியுள்ளமை குறக்கத்தக்கது.
-பேரா.சே.செந்தமிழ்ப்பாவை


சில பழமொழிகள்

சில பழமொழிகள்
v  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
v  வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
v  கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின்  அதுவே இனிப்பு.
v  அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
v  உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
v  இறைக்க ஊறும் மணற்கேணி ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
v  ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
v  கள் விற்றுக், கலப்பணம் சம்பாதிப்பதை விடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
v  காய்த்த மரம் கல்அடிபடும்
v  முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

-பெ.குபேந்திரன்

தமிழாயிரம்

தமிழாயிரம்
இன அழிப்பு
1.     இவணுள்ளார், சான்றோரகள் அன்றே உரைத்தும்
        சுவராக நின்றார் தனித்து.

2.     தனித்தனிக் கட்சியுடன் தாழ்வுறுத்து சாதி
        இனிப்பானார் நில்லார் இணைந்து

3.     இணையா நிலைமை எளிதாய் அறிந்தார்
        இணைந்தே கொடுக்கிறார் இன்று.

4.     இன்றை நிலைமை இதுவென்றார் அன்றம் தாம்
        ஒன்றாக நின்றறியார் ஓர்.

5.     ஓர்ந்தால் தமிழர் தமிழராய் நின்றிருப்பார்
       நேர்ந்தார்பால் நேராமல் நின்று.

6.    நின்றழித்த ஆரியத்திற் காட்பட்ட ஆள்வோரால்
       இன்றுவரை நேர்தல்  நினை

7.    நினைத்தால் தமிழர் அழியத் தமிழர்
       எனைத்தும் கொடுத்த தறி.

8.    அறிவான் இனக்காப் பறிவான் பகையை
      அறிந்தழிப்பான் வாழ்வான் அணைந்து.

9.   அணைந்தான் அயலார் தமைப்போய் அழைத்தான்
      துணிந்தழித்தான் தன்னினம் தான்.

10.   தன்னினம் தானழிக்கத் தந்தனவே அன்னியா்
        முன்னிய ஆட்சிகள் மூன்று


நிற்கக் கற்க..

சிறுகதை-7 ~ ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்