திங்கள், 15 மே, 2017

கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்!

தலையங்கம்
தேன்  - 1                துளி - 5
தி.பி 2048 (கி.பி 2017)                                       சித்திரைத்திங்கள்(மே மாதம்)

கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்!

            எப்பொழுது வரும், எப்பொழுது வருமென்று விடியலுக்காய் ஏங்கித் தவம் கிடந்தவா்களுக்கு, பள்ளிக் கல்விச் செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல் நன்னம்பிக்கை முனையாக  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி வருகிறார்.  உயா்திரு. த.உதயசந்திரன் இ.ஆ.ப அவா்கள்.
            பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு இம் மேமாதத்தில் தலைசிறந்த எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், சிந்தனையாளர்கள் போன்ற ஆளுமைகளைக் கொண்டு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளைப் பயனுற வழங்குதல், தமிழ் விக்கிப் பீடியாவை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளுதல், பாடத்திட்டம் மாற்றப் பரிசீலனை, ஆசிரியா்கள் சங்கப்  பொறுப்பாளா்களுடன் கலந்துரையாடல், தினந்தோறும் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் நிகழ்த்த வலியுறுத்தல், ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் தனித்தனியே பத்திரிகைகளைத் துவக்குதல், பொதுத் தோ்வு முடிவுகளில் தரவரிசை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளின் தரமுயா்த்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துதல், கல்வி அதிகாரிகளைத் தானே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தல் போன்ற பல்வேறு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் மூலம் வரும் கல்வியாண்டை வளமான கல்வியாண்டாக வளா்ச்சிப் பாதையில் செலுத்திட செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்..
            “எவ்வழி நல்லவா் ஆடவா்
            அவ்வழி நல்லை வாழிய நிலனே” (புறம்.187)
என்று சங்ககால ஔவையார் பாடுவது போல் எங்கு, எந்தப் பொறுப்பு வகித்தாலும் அத்துறைக்கும்,  பொறுப்பிற்கும் சிறப்பு சேர்ப்பதோடு பணியில் நோ்மை, பழகுதற்கு இனிமை, சிந்தையில் சீா்மை, செயலில் கூா்மை, கல்வித் துறையின் உயரதிகாரிகளிலிருந்து கடைக்கோடி கிராமத்து ஆசிரியா் வரை ஆலோசனைகளுக்கு செவிசாய்த்து செயல்படுத்தும் மாண்பு போன்ற நற்பண்புகளின் கூட்டுருவாகத் திகழும் மதிப்புறு உதயசந்திரன் இ.ஆ.ப அவா்களால் பள்ளிக் கல்விச் செயலா் பொறுப்பிற்கும் மதிப்பு உயா்வது உறுதி.
            ‘மருளும் இருளும் விலகி மகிழ்ச்சி ஒளி பரவட்டும்’
                                      அன்பின் வாழ்த்துக்களுடன்,

ஆசிரியா்குழு - தேமதுரம் 

ஆசிரியா்

.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியா்

மீனாட்சி

துணையாசிரியா்

.சகுந்தலா

ஆசிரியா்குழு

 ந.முத்துமணி

க.கலைச்செல்வி

பெ.குபேந்திரன் 

கா.சுபா 



கணினிதட்டச்சு
.லெட்சுமி

தொடா்புமுகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.

1 கருத்து:

  1. மிக மிக உண்மை .... இப்பதிவு தந்ததற்கு மிக்க நன்றியும் கூட ...10 வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியாளராக இருந்த போது ஒரு சனிக் கிழமை அன்று ஆசிரியர்களை சந்தித்து உத்வேகமான ஒரு வாழ்த்துரை வழங்கினார். அதில் ஊக்கம் பெற்றவர்களுள் நானும் ஒருவள். இன்று அவரே கல்வித் துறை செயலராக .... அருமை

    பதிலளிநீக்கு